எங்கய்யா வேங்கை மவன காணோம்? வலைவீசி தேடும் நெட்டிசன்கள்

செவ்வாய், 22 மே 2018 (15:25 IST)
பணியில் இருக்கும் காவலர்களை தாக்கியது கொடூரத்தின் உச்சம் என சொல்லிய ரஜினிகாந்த், தூத்துக்குடியில் போலீஸாரால் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மவுனம் காப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர். 
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
சர்வாதிகாரத்தின் உச்சமாய் போலீஸ்காரர்கள் சுட்டத்தில், அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் வாய்கிழிய பேசும் ரஜினி( ஐபிஎல் போட்டியின் போது பணியில் இருக்கும் காவலர்களை தாக்கியது கொடூரத்தின் உச்சம் என சொல்லியது),

தூத்துக்குடியில் காவலர்கள் அரக்கர்களை போல் 3 பேர் சுட்டுக் கொன்றதற்கு ஏன் இன்னும் வாயவே திறக்கவில்லை. இப்பொழுது அவர் எங்கே போனார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்