விஜயகாந்த் பற்றி அதிகமாக ஊடகங்களில் வருவது அவரின் அடிதடி செயல்கள் தான். அரசியலில் வந்ததில் இருந்து இன்று வரை விஜயகாந்த் கோபம் வந்தால் திட்டுவதும், தொண்டர்கள், வேட்பாளர்கள், பாதுகாவலர் என பாரபட்சம் இல்லாமல் அடிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இவரின் இந்த செயல்பாடுகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகமாக பேசப்படும் ஒன்று. இந்நிலையில் தஞ்சையில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் தான் கூட்டங்களில் பிறரை அடிப்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
முன்னதாக தனக்கு முதல்வராக என்ன தகுதி இருக்கிறது என கேட்கிறார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என் அம்மா, அப்பா கிராமத்தில் பிறந்தவர்கள் இதைவிட என்ன தகுதி வேனும் நான் முதல்வராக என பேசினார் விஜயகாந்த்.