சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் தல அஜித் திருவான்மியூர் வாக்குச்சாவடியிலும் ரஜினி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் பல திரையுலக பிரபலங்கள் பலர் வாக்குப் பதிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் தளபதி விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர்.