யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்?

வியாழன், 22 டிசம்பர் 2016 (14:22 IST)
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 

 
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டு தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. 
 
தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானவர்.  அதன்பின்  கடந்த 30 வருடங்களாக சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முக்கியமாக, நிதித்துறையில் அதிக அனுபவம் பெற்று, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் ஆவார்.


 

 
மேலும், இவர் நாடகம்,  சினிமா நடிகர் மற்றும் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் அண்ணி (சகோதரணின் மனைவி) என்பதும் தெரிய வந்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்