10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . ஏற்கனவே மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. அதேசமயம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.