ஜெயலலிதாவின் நினைவிடம் எப்போது திறப்பு ?

வியாழன், 23 ஜனவரி 2020 (21:05 IST)
மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் நாளில் திறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அதற்கான பணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தார். மெரினா கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், பீனிக்ஸ் வடிவில் இடம் பெரும் இந்த நினைவிடம் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த நினைவிடம் திறக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்