திரையரங்குகள் எப்போது திறப்பு? அமைச்சர் தகவல்

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:43 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது. 
 
இந்நிலையில் தமி்ழகத்தில் நாள்தோறும் குறைந்த அளவு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
 
எனவே, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதாக இருந்த நிலையில், இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகள் திறக்க வேண்டும்  எனத்  திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: இந்த வாரம் மருத்துவக் குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தி, எப்போது திரையரங்குகள் திறக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
c

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்