ரஜினி – கவர்னர் சந்திப்பில் தவறு என்ன? அண்ணாமலை!

புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:31 IST)
ரஜினிகாந்த், அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார், இதில் என்ன தவறு இருக்கிறது? என அண்ணாமலை கேள்வி.


ரஜினிகாந்த் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் மற்றும் பேட்டிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் பொதுமக்கள், பல்துறை சாதனையாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவது கவர்னரின் மரபு. அவ்வாறாகவே நடிகர் ரஜினிகாந்தும் கவர்னரை சந்தித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது?

மனிதனை தவறாக பேசுவது அரசியல் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்டுங்கள் என கேள்வி எழுப்பி ரஜினி – ஆளுநர் சந்திப்பை ஆதரித்து பேசியுள்ளார். சமீபத்தில் டெல்லி சென்று வந்த பின் அவர் திடீரென கவர்னரை சந்தித்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்