தாலுகா அலுவலகத்தை, நெல்லை மாவட்டம் கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த போஸ்டர் தொடர்பாக, பதில் அளித்த கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அபூபக்கர், “ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தலைவரை அடைமொழி சொல்லித்தான் அழைக்கிறார்கள். திமுகவினர் தங்கள் தலைவர் கருணாநிதியை கலைஞர் என்று அழைக்கிறார்கள். அறிஞர் அண்ணாத்துரையை அண்ணா என்றுதான் அழைக்கிறோம்.
அதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பெரும்பாலானவர்கள் அம்மா என்று அடைமொழியுடன் அழைக்கிறார்கள். அம்மா என்பது நல்ல வார்த்தைதானே. அதனால் அவரை அம்மா என்று அழைப்பதில் தவறில்லை. கடையநல்லூருக்கு தாலுகா அந்தஸ்தும், தாலுகா அலுவலகமும் தந்ததற்காக நன்றி தெரிவிப்பது எங்கள் கடமை. அதில் அம்மாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை” என்று கூறினார்.