தேர்தல் வாக்குறுதி நமது கோவை கனவாக போய்விட்டது.பாஜக அண்ணாமலை கோவைக்கு கொடுத்த வாக்குறுதிகளை படித்தால் நேரம் தான் வீண்.கோவைக்கு எந்த திட்டமும் ஏன் அறிவிக்கவில்லை.திமுகவிற்கும் பாஜகவிற்கு எந்த வித்தியாசமும் இல்லை.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றதவர்கள் இவர்கள் தான்.சென்னை மெட்ரோ பற்றி பேசும் அண்ணாமலை கோவை மெட்ரோவிற்கு என்ன செய்தார். எம். பி வேணும் சொல்லும் பாஜக, வரி வேணும் சொல்லும் பாஜக தமிழ்நாட்டிற்கு ஏன் எந்த திட்டமும் இல்லை என்றது.அண்ணாமலை ரொம்ப பேசுகிறார்.பாஜக 21 தொகுதியில் டெபாசிட் வாங்கவில்லை.கோவைக்கும், அண்ணாமலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இங்கு நாடாளுமன்ற தேர்தலில் நின்றீர்கள்.அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது.கோவை மக்களுக்கு இவர்கள் நல்லது செய்ய முடியாது.அதிமுக தான் கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள் செய்யும்.மின் கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைவரும் பாதிப்படைந்து உள்ளனர். திமுகவும் பாஜகவும் மக்களை மத்தாளம் போன்று இரண்டு பக்கமும் அடிக்கிறார்கள்.கோவைக்கு வந்த பிரதமர் கோவைக்கு ஒரு திட்டத்தை கொடுத்தாரா. தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அண்ணாமலை அழைத்து வந்தார் ஏன் ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை.