கமல்ஹாசன் பேசுவதும் சரி, டுவீட்டுக்கள் பதிவு செய்வதும் சரி பலருக்கு புரியாது. தனது தமிழ்ப்புலமையை நிரூபிக்கும் வகையில் அவர் பல நேரங்களில் தூய தமிழில் பேசிவருவது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் பதிவு செய்திருக்கும் டுவீட், பலருக்கு புரியவில்லை என்பதால் இதோ தமிழுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு
இந்த டுவீட்டுக்கு அர்த்தம் இதுதான்: காந்தியின் அஸ்தியை திருடி சென்றவர்களே!, அந்த அஸ்தியை நீங்கள் உங்கள் நெற்றியில் பூசி திருந்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் நீங்கள் காந்தியை போல் இன்னும் பலரையும் கொலை செய்வதால் ஏற்படும் பிணக்குவியல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. உங்களது போலி பக்தியின் அஸ்திவாரம் மரணித்த், காந்தியின் அஸ்தி என்னும் சாம்பலுடன் மேலுலகம் செல்லுங்கள் என கணக்கில் அடங்காத இந்தியர்கள் விரும்புகிறோம். அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்பதுதான் கமல்ஹாசனின் டுவீட்டுக்கு அர்த்தம்,