தமிழகத்திற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி

சனி, 3 பிப்ரவரி 2018 (08:09 IST)
திமுக ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து திமுக பட்டியலிட முடியுமா என்று முக ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2018-19 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் என்பது வெறும் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு தான் என்றும் அதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் மத்திய பட்ஜெட்டால் நாட்டு மக்களுக்கோ, நாட்டு வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக மக்களின் நலன்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தி தரும் விதமாக உள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினார். மத்திய பட்ஜெட்டில் அதிநவீன ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 5-ஜி இணைய சேவை பற்றிய ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளுக்கு(Testing and Research centre) சென்னை ஐ.ஐ.டி.க்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக 2400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
பாஜகவை குறை கூறும் திமுக, ஆட்சியில் இருந்த போது தமிழக மக்களுக்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் என்னென்ன? கண்டிப்பாக திமுக இதற்கு பதில் கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் ஆட்சிகாலத்தில் தமிழக மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று தமிழிசை திமுக வை சாடினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்