இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
குறிப்பாக வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும், புயலுக்கு பின்னரும் ஒரு சில மணி நேரங்களுக்கு காற்று மற்றும் கனமழை தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது