ஏரியின் கொள்ளளவு 22 அடியாக உயர்ந்த பின்னர் ஏரியில் உள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர். நண்பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடியும், அதன் பின்னர் 3000 கன அடியும், நீர் வெளியேறிய இன்று மாலை நிலவரப்படி 7 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்திறப்பு அதிகரித்துள்ளதாக தற்போது 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார் இதனால் முடிச்சூர் பகுதிகள் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது