தேவைப்பட்டால் போரை தொடங்க தயங்க மாட்டோம்! அமைதி ஒப்பந்தம் குறித்து நேதன்யாகு எச்சரிக்கை!

Prasanth Karthick

ஞாயிறு, 19 ஜனவரி 2025 (09:58 IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலாகும் நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலியர்கள் பலரை ஹமாஸ் பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதோடு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஹமாஸ் கூறி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

 

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நேரப்படி போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளதால் காசாவில் உள்ள இஸ்ரேல் ராணுவம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

 

அமைதி ஒப்பந்தம் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு “ஹமாஸ் ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணையக் கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் நடந்தால் இஸ்ரேல் அதை பொறுத்துக் கொள்ளாது. தேவைப்பட்டால் அமெரிக்க ஆதரவோடு மீண்டும் போரை தொடங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்