திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி தீபத்திருவிழாவை நடத்துவோம்! - அமைச்சர் சேகர்பாபு உறுதி!

Prasanth Karthick

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (15:54 IST)

திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

 

திருவண்ணாமலையில் வரும் 13ம் தேதி திருக்கார்த்திகை அன்று தீபத்திருவிழாவும், மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட இருந்த நிலையில், திருவிழாவிற்காக சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

 

இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கனமழை நீடித்தால் மகாதீப மலையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தீபத்திருவிழா நடக்குமா? மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து பேசியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழாவை நடத்துவோம் என்றும், கிரிவலப் பாதையில் சேதம் ஏற்பட்டிருந்தால் 2 நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்