'' ஹெல்மெட் அணிய விலக்களிக்க வேண்டும்" - மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:25 IST)
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒரு கவுன்சிலர் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மேயராக பிரியா பதவி வகித்து வருகிறார். சென்னை மாமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும்   நிலையில், இன்றைய  கூட்டத்தின்போது,  வார்டு உறுப்பினர் தேவி, தனது வார்டுக்கு பைக்கில் ஆய்வுக்கு செல்லுகையில், ஹெல்மெட் அணிந்து செல்வதால், பொதுமக்களால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. அதனால் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேயரிடம்  கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மேயர் பிரியா, ஹெல்மெட் அணிவது பாதுகாப்பிற்காக, கவுன்சிலர் என்றாலும்  உத்தரவை மீறக் கூடாது என்று  கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்