வாச்சாத்தி 18 பெண்கள் வன்கொடுமை வழக்கு! – இன்று தீர்ப்பு!

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (09:00 IST)
1992ல் வாச்சாத்தியில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற அதிகாரிகளின் மேல்முறையீட்டின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.



1990களில் சந்தன கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக 1992ம் ஆண்டில் வனத்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 18 பெண்களை அவர்கள் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, குற்றம்சாட்டப்பட்ட 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சமயத்திலேயே 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து முக்கிய தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்