தேங்கி நிற்கும் மழை நீர்... அகற்ற போராடும் மாநகராட்சியினர்

திங்கள், 29 நவம்பர் 2021 (14:36 IST)
தொடர் மழையின் காரணமாக சென்னையில் சாலைகளில், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தொடர் மழையின் காரணமாக சென்னையில் சாலைகளில், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை மாநகராட்சி கூறிவுள்ளதாவது, 
 
சென்னையில் 103 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. நீரை அகற்ற 900 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை கூவம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்