தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி : சென்னையில் பரிதாபம்

வியாழன், 13 அக்டோபர் 2016 (15:37 IST)
சென்னை  கிண்டியில், தண்ணீர் லாரி மோதி 3 இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கிண்டி சாலையில் இன்று மதியம் பொதுமக்கள் சாலையை கடக்க முயன்றனர். அதில் செல்லம்மாள் கல்லூரியை சேர்ந்த சில மாணவிகளும் இருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு தண்ணீர் லாரி அவர்களின் மீது மோதியது. 
 
இதில் சித்ரா, காயத்ரி, ஆயிஷா என்ற 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல், இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காயமடைந்தனர்.
 
லாரியை வேகமாக ஓட்டியதுதான் காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
மரணமடந்த 3 மாணவிகளின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த விபத்து காரணமாக, கிண்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சீர் செய்யும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்