காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் ஒடியும் கரூர் நகரில் நீங்கா குடிநீர் பஞ்சம்!

வியாழன், 6 செப்டம்பர் 2018 (17:38 IST)
காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் ஒடியும் கரூர் நகரில் நீங்கா குடிநீர் பஞ்சம் 45 தினங்களாகியும் தண்ணீர் வராததினால்,– காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் நகரம் என்றாலே, அமராவதி நதி நகரின் நடுவிலேயேயும், கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் காவிரி நதியும் பாய்ந்து வரும் நிலையில், கரூர் நகராட்சியின் பல பகுதிகளில் 45 நாட்களாகியும், இதுவரை மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் குடிநீர் வரவில்லை.

இதனால், காந்திகிராமம், வடக்கு காந்திகிராமம், அமர்ஜோதி கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றுவரை குடிநீர் வராததினால், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள், காந்திகிராமத்தில், கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலைமறியலை கலைத்தனர். இந்நிலையில் அங்கு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்ட இந்த சம்பவத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, காவிரி மற்றும் அமராவதி நதிகள் நன்கு தற்போது பாய்ந்து வரும் நிலையிலும், கரூர் நகராட்சிக்கு குடிநீர் பஞ்சமா ? என்ற ஐயப்பாடும்.

இந்நிலையில் குடிமராமத்துப் பணிகள் மட்டுமில்லாது, பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களுக்கு அதிகாரிகளையும் அரசு நியமித்து இதுவரை எந்த ஒரு தீர்வு காணாத நிலையில், கரூர் நகராட்சியின் பழைய கமிஷனர் மாற்றுதலாகி, தற்போது புதிய கமிஷனர் வந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலை, இப்பகுதி பல பொதுமக்களின் குறைகளை இன்றுவரை தீரவில்லையே என்று புகார் தெரிவித்துள்ளனர்.

பேட்டி : பெரியவர் அப்பகுதியில் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள்  காந்திகிராமம் கரூர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்