தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது: சித்தராமையா

செவ்வாய், 21 மார்ச் 2017 (21:29 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


 


 
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, வினாடிக்கு 2000 கன அடி நீர் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
 
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கை வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எங்கள் மாநிலத்தின் பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்