காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

Mahendran

வெள்ளி, 24 மே 2024 (13:32 IST)
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றிய நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக இது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் அதாவது சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்