மும்பையை தாக்கிய பயங்கர புழுதிப்புயல்.. 14 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்..!

Siva

செவ்வாய், 14 மே 2024 (08:54 IST)
மும்பையில் இன்று அதிகாலை திடீரென புழுதி புயல் ஏற்பட்டதாகவும் இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

மும்பையில் திடீரென 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததாவும் அதன் பிறகு சில நிமிடங்களில் புழுதிப்புயல் வீச தொடங்கியதாகவும் இந்த புழுதிப்புயல்  50 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தூசி படலமாக காட்சியளித்ததாகவும் இந்த புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிக்கலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புழுதி புயல் காரணமாக கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை சரிந்து விழுந்ததாகவும் 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் உள்ள வீடுகள் நொறுங்கியதாகவும் இதில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பலியானதாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்