பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: வாக்காளர்கள் சிரமம்

வியாழன், 18 ஏப்ரல் 2019 (08:35 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியுள்ளதால் அந்த இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதமாகி வருகிறது, இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
 
சேலம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 217ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. அதேபோல் தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளை  பகுதி வாக்கு சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியிருப்பதால் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய  காத்திருக்கின்றனர்.
 
மேலும் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் பழுதாகியுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், சென்னை ஆதம்பாக்கம் இந்திராகாந்தி பள்ளி வாக்குச்சாவடி, திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகிய இடங்களிலும் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் வாக்குபதிவு செய்யவுள்ள வாக்குசாவடியிலும் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக கமல்ஹாசன் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் வாக்களித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்