நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் எம்.எல்.ஏக்கள் கார்களை மறித்து எதிர்ப்பு!

சனி, 18 பிப்ரவரி 2017 (10:12 IST)
தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக சட்டசபையில் இன்று தனது  பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கு  கோருகிறார்.

 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு 11 மணியளவில் தொடங்க உள்ளது. அதற்காக கூவத்தூரில் தங்கிருந்த  அதிமுக எம்.எல்.ஏக்கள், கார்கள் மூலம் சென்னை வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிர்ப்பு  தெரிவித்து, சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்  எம்.எல்.ஏக்கள் வரும் கார்களை மறித்து, கோஷங்கள் எழுப்பவும் முயற்சி செய்தனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர்  அவர்களை கைது செய்து, அழைத்துச் சென்றனர்.
 
இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் வந்து சேர்வர் என்று கூறப்படுகிறது. முன்னதாக முதலமைச்சர்  பழனிச்சாமி சட்டமன்றம் வந்து சேர்ந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களும் சற்று முன், சட்டமன்றம் வந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்