விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்த தொண்டர் அதிர்ச்சியில் பலி! – விழுப்புரத்தில் சோகம்!

ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (09:58 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்த தேமுதிக தொண்டர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



பிரபல தமிழ் சினிமா நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 28ம் தேதி காலமானார். அவரது கட்சியினரை தாண்டி திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் இடையேயும் இந்த இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது திருவுடலுக்கு ஏராளமான மக்கள் மரியாதை செலுத்திய நிலையில், அங்கிருந்து கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அவரது திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது நல்லடக்கம் பெரும்பான்மையான தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக கிளை செயலாளர் விஜயகுமார் என்பவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊருக்கு வந்த பின்னர் டிவியில் அவரது இறுதி சடங்குகளை பார்த்துள்ளார்.

அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டிருந்த விஜயக்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவை டிவியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்