விவேகம்’ படத்தின் ஒவ்வொரு பாடலையும், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை வெறியேற்றி வருகிறார் இயக்குனர் சிவா. ‘சர்வைவா’ மற்றும் ‘தலை விடுதலை’ பாடல்களைத் தொடர்ந்து, மூன்றாவது பாடல் நாளை வெளியாக இருக்கிறது. ‘காதலாட’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இதுதான் அஜித்திற்கு அவர் எழுதிய முதல் பாடல். அதுமட்டுமல்ல, அனிருத்தின் இசையில் அவர் எழுதிய முதல் பாடலும் இதுதான். கடந்த இரண்டு பாடல்களும் பெப்பியாக இருந்ததால், மூன்றாவதாக வெளியாகும் பாடல் கிளாஸிக்கலாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தப் பாடலை வெளியிடுகின்றனர். அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.