விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : சிபிஐ விசாரணை நிறைவு
வெள்ளி, 25 மார்ச் 2022 (19:48 IST)
விருதுநகரில் 22 வயது இளம் பெண் ஒருவரை 8 பேர்கள் சேர்ந்து மாறி மாறி பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விபத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து விருதுநகர் 22 வயது இளம் பெண் பாலியல் வழக்கு சம்பந்தமாக கோப்புகள் அனைத்தும் சிபி சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
விருது நகர் பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்ப்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.