தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: விருதுநகர் சம்பவம் குறித்து விஜயகாந்த்!

வியாழன், 24 மார்ச் 2022 (18:18 IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது என விருதுநகர் சம்பவத்தின் அடிப்படையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
விருதுநகர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி உள்பட 8பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம், வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களை கேட்டு பெருவருத்தம் அடைந்தேன்
 
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தினமும் நடைபெற்று வருவது கடும் கண்டனத்துக்குரியது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று விருதுநகர் மற்றும் வேலூரில் நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மனதை உலுக்குகிறது.
 
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.  இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்