மாடியில் இருந்து கிழே விழுந்த பொறியியல் கல்லூரி மாணவி: தற்கொலை முயற்சியா?

திங்கள், 25 ஜூலை 2022 (14:04 IST)
மாடியில் இருந்து கிழே விழுந்த பொறியியல் கல்லூரி மாணவி: தற்கொலை முயற்சியா?
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதேபோல் திருவள்ளூர் அருகே கீழச்சேரி என்ற பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்