ஒரு மகன் சினிமாவுக்கு, ஒரு மகன் அரசியலுக்கு: விஜயகாந்தின் அதிரடி முடிவு

ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (09:19 IST)
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் கால்பதித்து தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், தனது சினிமாவுலக வாரீசாக மகன் சண்முகப்பாண்டியனையும், அரசியல் வாரீசாக இன்னொரு மகன் விஜயபிரபாகரனையும் நுழைக்க திட்டமிட்டுள்ளார்.



 
 
ஏற்கனவே சினிமாவில் 'மதுர வீரன்' படத்தில் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் நிலையில் தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் தேமுதிக கட்சியில் சதீஷின் ஆதிக்கம் அதிகரிப்பதை விஜயகாந்த் விரும்பவில்லை என்றும் அவர் மீது தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து பல புகார்கள் கூறி வருவதால் கட்சியை தனக்கு அடுத்து இரண்டாம் இடத்தை மகனுக்கு கொடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்