2015 ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த விஜயகாந்திடம் செய்தியாளர் ஒருவர் 2016-இல் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா? என கேட்டு த்தூ என காரித்துப்பினார்.
மேலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார். இந்த இரண்டு சம்பவங்களுக்காக விஜயகாந்த் மீது இந்திய பிரஸ் கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் வழக்கறிஞர், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.