ஆன்லைன் தேர்வு: மாணவர்களுக்கு விஜயகாந்த் ஆதரவு!

சனி, 20 நவம்பர் 2021 (15:30 IST)
கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை. 

 
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்தது. 
 
சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாது என்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தது.  இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். நேரடித்தேர்வு நடத்த 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்