சதீஷ்க்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (18:50 IST)
கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ்க்கு  தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 2016 சுவாதி, 2021ல் சுவேதா தற்போது சத்யபிரியா என ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது
 
ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்த விதத்தில் நியாயம்
 
இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியாவை கொடூரமாக கொலை செய்த சதீஷ்க்கு தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்