நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார் விஜயகாந்த்.
நன்றி: News7
கூட்ட நெரிசலை பார்த்து எரிச்சலடைந்த விஜயகாந்த் அருகில் கூட்டத்தினரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த பாதுகாவலர் ஒருவரின் முதுகில் தாக்கினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் பாதுகாவலரை தாக்கியதும், பாதுகவலர் கூட்டத்தினரை தாக்க ஆரம்பித்தார்.