முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!
சனி, 4 மார்ச் 2023 (10:22 IST)
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்
ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து விஜய் பாஸ்கரும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் அதிமுக வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.