மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

Mahendran

வியாழன், 29 மே 2025 (13:22 IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் நோக்குடன், கடந்த இரு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்.  
 
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கல்வி விருது விழா, நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறவுள்ளது.  சென்னை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
 
மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விழா மண்டபத்திற்குள் செல்போன்கள், காகிதம், பேனா போன்றவை அனுமதிக்கப்படவில்லை. விழா, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, விஜய்யின் உரையுடன் தொடரும். மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வைர மோதிரம் அல்லது கம்மல் வழங்கப்படவுள்ளன. மாவட்டத்துக்குள் முதலிடம் பெற்றோருக்கு தங்க நாணயங்கள், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்