இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக்கழகம் குறித்து கூறிய போது, "கட்சி ஆரம்பிக்கும் போது கொள்கை, கோட்பாடு என பேசுவார்கள்; ஆனால் அதன் பிறகு வேறு திசையில் மாறிவிடுவார்கள். அப்படி திசை மாறாமல் வகுப்புவாத பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுக்க வேண்டும். தமிழக வெற்றிக்கழகம் நேற்று பிறந்த குழந்தை, புதிய கட்சி, அதனால் அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம்," என்று தெரிவித்தார்.
மேலும், "விஜய் எப்படி அரசியல் செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு பிரபலமான நடிகர் கட்சி ஆரம்பித்தால், அது எதிர்நிலை வாக்குகளை எதிரணி அணிக்கு செல்ல விடாமல் மாற்றம் செய்ய பயன்படும்; திமுக எதிர்ப்பு ஓட்டுகள் விஜய்க்கு போகலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.