கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், நேற்று முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார் என்பதும், இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்தது.
விஜயின் அரசியல் வருகையை அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன என்பதும், குறிப்பாக திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜகவும் விஜயின் அரசியலை விமர்சித்துள்ளது. "மிஸ்டர் விஜய், ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இழந்து விட்டது. வசனகர்த்தர் எழுதிக் கொடுத்த சினிமா வசனங்களை சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள். உங்கள் மாநாடு வெற்றி தான், ஆனால் உங்கள் அரசியல் வெற்றி அடையாது," என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.