கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, விஜய்யின் தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் எனத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமான் கட்சி ஆகியவை மும்முனை அரசியல் போட்டியில் உள்ளன. இந்நிலையில், விஜய் தனித்துப் போட்டியிட்டால் நான்கு முனைப் போட்டி உருவாகும் என்பதால் அரசியல் சூழல் மேலும் சிக்கலாகும் எனக் கூறப்படுகிறது.
இளம் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற முடிந்தால் வெற்றி பெறலாம் என அவர் நம்புவதாகவும், எந்த கூட்டணியும் தேவைப்படாது எனக் கருதுவதாகவும் விஜய் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.