முன்னதாக மதுரையில் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு விஜய்யை எம்ஜிஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து ஒட்டிய போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “எம்ஜிஆர் கெட்டப் போட்டால் மட்டும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என பேசியிருந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலும் எம்ஜிஆரின் புகழ்பெற்ற வேடங்களில் விஜய்யின் முகத்தை மார்பிங் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ”மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.