தமிழ்நாட்டின் கோவில்களில் தரிசனம் செய்தேன்: துணை குடியரசு தலைவர் தமிழில் ட்விட்..!

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:15 IST)
தமிழ்நாட்டின் கோவில்களில் தரிசனம் செய்தேன் என துணை குடியரசு தலைவர் தமிழில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் உள்ள மகாவதார் பாபாஜி கோயிலில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தேன். உவகையுடன் உயர் பேரானந்தம் பெற்றேன்

தில்லை நடராஜர் கோவில், தன்யனானேன், சக்தி பெற்றேன், புளகாங்கிதம் அடைந்தேன். சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தரிசனம் செய்து, நாட்டு மக்கள் அனைவரும் நலமடைய வேண்டி பிரார்த்தனை செய்தேன். நடராஜப் பெருமான் நம் மனங்களில் இருந்து அறியாமையையும் தீமையையும் அகற்றி, இந்த பிரபஞ்சத்தை அமைதி மற்றும் செழிப்புடன் அருள்பாலிப்பார்.


புதுச்சேரி நேற்று வருகை தந்த துணை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடும்பத்தினருடன் தனி ஹெலிகாப்டரில் அங்கிருந்து  சிதம்பரம் அண்ணாமலைநகர் அண்ணாமலை பல்கலைக்கழக த்திற்கு வந்தார்.

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இதையடுத்து துணை குடியரசு தலைவர்  ஜக்தீப் தன்கர் கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு  தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் சென்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்