ஆர்.கே. நகரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்னர் இந்த வீடியோ வெளியானதால் இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.