தந்தையின் சமாதியில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்ட வீரப்பனின் மகள்!

Mahendran

திங்கள், 25 மார்ச் 2024 (12:50 IST)
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று தனது தந்தையின் சமாதியில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி என்பவர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவர் தனது அப்பாவின் சமாதிக்கு சென்று வேட்புமனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 
 
வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு அந்த கட்சியில் ஓபிசி அணியின் மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 
பின்னர் அவர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்