மகா சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது: கீ.வீரமணி, திருமாவளவன் எதிர்ப்பு!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:45 IST)
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மகாசிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கி வீரமணி திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்து அறநிலை துறை சார்பில் மார்ச் 3ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளன 
 
இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை என்பது அதன் பணிகளை கவனிக்க மட்டுமே என்றும் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு அல்ல என்றும் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் 
 
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும் இந்து அறநிலைத்துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்றும் பார்ப்பனர்களை திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள் மதச்சார்பற்ற அவர்களது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தலாமா? என்றும் இதனை முதல்வர் முக ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்