ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பால் கிடுகிடுவென சரிந்த வேதாந்தா பங்குகள்!

திங்கள், 20 ஜூன் 2022 (15:30 IST)
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் உத்தரவு காரணமாக மூடப்பட்டது. 
 
இதுகுறித்த வழக்கு நீண்ட காலம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முன்வந்துள்ளது. 
ஜூலை 4 ஆம் தேதிக்குள் ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது. 
 
ஸ்டெர்லைட் விற்பனை குறித்த செய்தி வெளியானவுடன் பங்குசந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்துள்ளது. சற்றுமுன் வரை இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12 சதவீதம் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்