தமிழகத்தின் 2ஆம் தலைநகராக கோவையை அறிவித்தால் என்ன? வானதி சீனிவாசன் கேள்வி

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (18:02 IST)
தமிழகத்தில் கொரனோ வைரஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும் வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் இரண்டாவது தலைநகர் குறித்த பிரச்சினையை தொடங்கியுள்ளனர் 
 
மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஆர்வி உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்றும் கோவையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்றும் வெவ்வேறு அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலமும் பேட்டிகள் மூலம் தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இரண்டாவது தலைநகர் குறித்து அமைச்சர்கள் கூறுவது அவர்களது சொந்த கருத்து என்றும் இரண்டாவது தலைநகர் குறித்து அரசுக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி ஒன்றின்போது கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் அதிமுக அமைச்சர்களை அடுத்து தற்போது பாஜகவும் இரண்டாவது தலைநகருக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது. பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் இது குறித்து கூறிய போது ’தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக கோவையை அறிவித்தால் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சென்னையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழக அமைச்சர்களை அடுத்து பாஜகவினரும் தற்போது இரண்டாவது தலைநகர் குறித்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்