இதற்கா ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, தேவர் சிலைக்கு மாலை போட வைகோ முயன்ற போது பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து, தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும், மாற்று வேட்பாளரான விநாயகா ஜி.ரமேஷ் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி, தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வைகோ மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.