தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இ ந் நிலையில், நம்பர் 1 தமிழ் நாடு என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் எனவும், ஐக்கிய அரசு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றூம் வெளி நாட்டு வர்த்தகத்துறை இணை அமைச்சருடன் சந்திபபு நடந்தது. இது தமிழக – அமீரக உறவுக்கு வலுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.